கஜா புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களையும்., உள்மாவட்டங்களையும் புரட்டி எடுத்து விட்டு சென்றது. இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் சிக்கி தற்போது வரை சுமார் 49 பேர் பலியானார்கள்.
இந்த புயலால் பல்லாயிரக்கணக்கனோர் வீடுகளை இழந்து வீதிகளிலும்., நிவாரண முகாம்களும் தங்கி வருகின்றனர். புயலால் பாதிப்படைந்த மாவட்டங்கள் முழுவதுமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்தந்த பகுதிகளுக்கு தேவையான உணவு., குடிநீர் மற்றும் பால் போன்ற பொருட்கள் அரசாங்கத்தின் மூலமாகவும்., தன்னார்வ தொண்டு அமைப்பினர் மூலமாகவும்., பிற கட்சியினர் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் இன்னும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கீழ்காணும் மாவட்டத்தில் விடுமுறை அளித்து உத்தரவிட்டனர்.
அந்த வகையில்., புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை., திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை., தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை., ஒரத்தநாடு பள்ளிகளுக்கு விடுமுறை., கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர்.






