பிரித்தானியாவில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு தண்ணீர் கூட இல்லமால் பரிதாபமாக இறந்த குழந்தை கடைசியாக சிரித்து விளையாடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த லாரன் கோய்லே (20) என்பவர் காதலனுடன் சேர்ந்து கொண்டு, பிறந்து 19 மாதங்களே ஆனா எல்லி மே என்ற தன்னுடைய குழந்தையின் கை, கால்களை கட்டி கூண்டுக்குள் அடைத்து வைத்துள்ளார்.
முகம் குப்புற படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தை தண்ணீர் கூட பருகாமல் உள்ளே இருந்ததால், உடலில் வெப்பம் அதிகரித்து துடிதுடித்து இறந்தது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் லாரன் கோய்லே (20) மற்றும் அவருடைய காதலன் Hitchcott-க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் இறப்பதற்கு முன்தினம் குழந்தை கடைசியாக சிரித்து மகிழ்ந்து விளையாடும் வீடியோ காட்சியினை பிரித்தானிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அதில், குழந்தை கயிற்றினால் கட்டப்பட்டு எங்கும் செல்லாதபடி ஒரு நபர் கையில் பிடித்தபடி வைத்துள்ளார். அதிலிருந்து மீள நினைக்கும் குழந்தை தரையில் விழுவது, காண்போர் கண்களில் நீரை வரவழைக்கிறது.










