பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ராஜா ராணி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் செம்பா. இவருக்கு ஜோடியாக நடிப்பவர் கார்த்திக்.
இவர்களின் உண்மையான பெயர் அலியா மானசா, சஞ்சிவ். இதில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அலியா மானசா தன்னுடன் நடக்கும் சஞ்சிவை காதலிப்பதாக கூறியுள்ளார்.
ராஜா ராணி படத்தில் வரும் ஒரு டயலாக்கை டப்ஸ்மாஷ் செய்து அதற்கு ஹாஷ்டாக் S என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பற்றி கூறும்போது ஆம் உண்மையில் நான் அவரை காதலிக்கிறேன் என்றுள்ளார். அதில் s என்று குறிப்பிட்டுள்ளது சஞ்சிவ் தான் என்றும் கூறியுள்ளார்.
மேலும் சமீபத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து திபாவளி கொண்டாடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.