திருமணம் முடிந்த 15 நாள்., பெண் செய்த காரியம்.!!

கோயம்புத்தூர் மாவட்டம் கணபதி பூந்தோட்டம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் சித்திரை சேர்மன். இவருக்கும் அதே பகுதியை சார்ந்த இவரின் உறவினர் பெண்ணான அபிநயா (21) என்பவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் 15 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 3 நாட்களில் வழக்கம் போல மளிகை கடைக்கு பணிக்கு சென்று வர சித்திரை துவங்கியுள்ளார்.

இந்த நிலையில்., இன்று காலை சித்திரை சேர்மன் கடையை திறப்பதற்க்காக அதிகாலையில் கடைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த அபிநயா துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

வீட்டில் இருந்து காலையில் அபிநயா வெளியே வராததால்., வீட்டிற்கு உள்ளே சென்ற குடும்பத்தினர் அபிநயா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அபிநயாவின் கணவருக்கும்., சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கும் தகவல் வழங்கினர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தூக்கில் தொங்கிய அபிநயாவின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் முடிந்து 15 நாட்களே ஆவதால் வட்டாச்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.