பாடசாலைக்கு சென்ற சிறுமிக்கு என்ன ஆனது?

பாடசாலை செல்வதாக சென்ற சிறுமி ஒருவர் காணமல் போயுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலம்பாவெளி சவுக்கடி பிரதேசத்தை சேர்ந்த ஜேசுதாஸ் ஜென்சியா எனும் 11 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சிறுமி காலை 7:00 மணிக்கு சவுக்கடியில் இருந்து மயிலம்பாவெளி விபுலந்த புரத்தில் உள்ள பாடசாலைக்கு சென்றுள்ளார். எனினும் பாடசாலைக்குள் பிள்ளை வரவில்லை. பி.ப 2:00 மணியாகியும் பிள்ளை வீடு திரும்பாத நிலையிலே பிள்ளை காணமல் போன விடயம் தெரிய வந்துள்ளது.

எனவே இப் பிள்ளையை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலயத்தில் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.