தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் மிகவும் முக்கியமான ஒருவர் நடிகர் விஷ்ணு. வெண்ணிலா கபடி குழு படகின் மூலம் பிரபலமான இவர் ஜீவா, குள்ளநரி கூட்டம், நேற்று இந்து நாளை, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.மேலும் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ராட்சசன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தன் மனைவி ரஜினியை தான் முறைப்படி விவாகரத்து செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
— VISHNUU VISHAL – VV (@vishnuuvishal) November 13, 2018






