ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் வசித்து வருபவர் ராஜண்ணா. 27 வயது நிறைந்த இவர் பெங்களூருவில் வியாபாரம் செய்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் இவருக்கும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியை சேர்ந்த அம்பிகாவிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு ,திருமணம் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடத்தவும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் ராஜண்ணாவின் பெற்றோர்கள் அம்பிகாவின் பெற்றோர்களிடம் வரதட்சணையாக 2 லட்சம் பணம் கேட்டிருந்தனர்.
ஆனால் அம்பிகாவின் பெற்றோரால் அந்த பணத்தை திரட்ட முடியவில்லை. மேலும் வரதட்சணை பணத்தை கேட்டு ராஜண்ணாவின் பெற்றோர் நெருக்கடி கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி வரதட்சணை பணத்தை கொடுத்தால்தான் திருமணம் நடக்கும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் திருமண நாள் நெருங்கிய நிலையில் வரதட்சணை கொடுக்காததால் ராஜண்ணாவின் பெற்றோர் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். ஆனால் அம்பிகாவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட ராஜண்ணா, பெண்ணின் வாழ்க்கை தன்னால் பாதிக்கப்படக்கூடாது என்று கருதி, வரதட்சணை கேட்ட தனது பெற்றோர் மீது போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரின்பேரில் போலீசார் இருகுடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அம்பிகாவின் பெற்றோர், வரதட்சணை கொடுத்தால்தான் திருமணத்தை நடத்த சம்மதிப்போம் என்று ராஜண்ணாவின் பெற்றோர் பிடிவாதமாக கூறியுள்ளனர்.இந்நிலையில் அம்பிகா மற்றும் அவருடைய குடும்பத்தினரின் நிலையைக் கண்டு இரக்கப்பட்ட போலீசார் தாங்களே வரதட்சணை பணத்தை கொடுத்து திருமணத்தை நடத்தி வைப்பது என்று முடிவு செய்தனர்.
அதன்பேரில் சாம்ராஜ்நகர் புறநகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த அனைவரும் தங்களால் முடிந்த தொகையை ஒன்று திரட்டி ரூ.40 ஆயிரம் சேர்ந்தனர் .
பின்னர் அந்த பணத்தை ராஜண்ணாவின் பெற்றோரிடம் வரதட்சணையாக கொடுத்து . மீதிப்பணத்தை அம்பிகாவின் பெற்றோரிடம் இருந்து பெற்றுத்தருவதாகவும் கூறியுள்ளனர் . அதை ஏற்றுக்கொண்ட ராஜண்ணாவின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






