ஜனாதிபதி கொலை சதி நாமல் குமாரவின் அடுத்த அதிரடி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து  இலங்கையிலும் சர்வதேசத்திலும் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நாமல் குமார ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவில் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

ஊழலிற்கு எதிரான அமைப்பொன்றின் தலைவர் என தன்னை குறிப்பிட்டுவரும்நாமல் குமார தன்னை அரசியலில் ஈடுபடுமாறு மக்கள்  வேண்டுகோள் விடுத்துவருவதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மக்களின் முடிவை ஏற்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளைஎடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.