சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் காலமானார்: கண்ணீரில் மூழ்கிய ஹாலிவுட்

ஹாலிவுட்டில் பிரம்மாண்ட படங்களின் பிரபல காமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ உடல்நலக்குறைவால் காலமானார்.

உலகின் பிரபலமான சூப்பர் ஹீரோக்களான Spiderman, Avengers, Captain America, Hulk, Thor, Fantastic Four, X men போன்ற மார்வெலின் பல காமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கியவர் ஸ்டான் லீ(95).

மேலும் டிசி காமிக்ஸின் கதாபாத்திரங்களான Superman, Batman, Aquaman, Sandman, Wonder Woman ஆகியவற்றையும் இவர் உருவாக்கியிருக்கிறார்.

மார்வெல் உருவாக்கத்தின் பிரம்மாண்ட படைப்புகளில் சிறப்பு தோற்றங்களிலும் ஸ்டான் லீ நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஸ்டான் லீ உடல்நலக் குறைவால் காலமானார்.

இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 1961ஆம் ஆண்டு ஜேக் கெர்பியுடன் இணைந்து ஸ்டான் லீ மார்வெல் நிறுவனத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.