ஒரு லட்சம் போலீசார் குவிப்பு.! நிலவும் பரபரப்பு.!

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் நாளை (12-ம் தேதி) மற்றும் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சத்தீஸ்கரில் நாளை 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 காவல்துறையினர், டி.வி. கேமராமேன் உள்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நக்சலைட்டுகள், பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு மிரட்டல் விடுதிருப்பதால், வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக துணை ராணுவத்தினர், காவல்துறையினர் என்று சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.