சர்க்கார் படம் பார்க்க சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம், கதறும் குடும்பத்தார்கள்.!

சர்க்கார் படம் பார்க்க சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் வசித்து வருபவர் தினேஷ்குமார்.18 வயது நிறைந்த இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த மகன் சித்திக். இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் தீவிர விஜய் ரசிகர்களான அவர்கள் விஜய் நடித்த சர்கார் படம் பார்க்க முடிவு செய்து மோட்டார்சைக்கிளில் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள தியேட்டருக்கு சென்றுள்ளனர். பின்னர் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் எதிரே வந்த லாரி மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.