கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ஜெட்பினோ ராஜ். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருந்துள்ளான்.
கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து ஜெட்பினோ ராஜின் மனைவி தனது மகனை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார்.
காதல் மனைவி தன்னை பிரிந்து சென்றதால் அதிர்ச்சியடைந்த ராஜ் பின்பு மனமுடைந்து தற்கொலைக்கு முடிவு செய்துள்ளார்.
வீட்டிற்குள் சென்றவரை நீண்ட நேரமாக காணாததால் உறவினர்கள் ஜெட்பினோ ராஜை தேட ஆரம்பித்தனர். அப்போது, வீட்டின் பின் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ராஜின் பிணம் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது.
காதல் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ராஜின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.






