விஜய்க்கு இது நல்லதல்ல! எச்சரிக்கை விடுத்த அதிமுக அமைச்சர்கள்!!

சன் பிக்சர்ஸ் தயாரித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “சர்கார்” படம் நேற்று தீபாவளியன்று வெளியானது.

இந்த படம் பல சிக்கலை கடந்து தாண்டி வந்துள்ளது. இப்படம் நேற்று வெளியாகி விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தல ரசிகர்கள் என அனைத்து தரப்பினரிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

மேலும் இப்படத்தில் மாநில அரசின் பல திட்டங்களையும், தமிழ்நாட்டில் அரசுக்கு எதிராக நடந்த பல உண்மை நிகழ்வுகளை பற்றியும், கள்ள ஓட்டு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்ததால் அனைத்து தரப்பினரிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு பேசிதாவது: “சர்கார் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு கூறியுள்ளார். அரசின் திட்டங்களை பற்றி திரைப்படங்களில் விமர்சிக்க கூடாது எனவும். இலவசங்கள் கொடுத்தால்தான் ஆட்சி நடத்த முடியும். இதனால் காட்சிகளை நீக்கவில்லை என்றால் முதல்வரிடம் இதுபற்றி பேசி நீக்குவோம். வளர்ந்துவரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல” என்று கூறியுள்ளார்.

மற்றொரு அமைச்சர் அன்பழகன்: “இலவசம் வழங்குவதுதான் சேவை, அதை யாரும் விமர்சிக்க கூடாது” என்று கூறியுள்ளார்.