ஆந்திரபிரேதேச மாநிலத்தில் உள்ள கர்னூல் நகரில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சங்கர். இவர் அதே பள்ளியில் 9 ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார்.
தனது காதலை அந்த மாணவியிடம் ஆசிரியர் சங்கர் பலமுறை தெரிவித்தும்., தன்னை காதலிக்குமாறும் தெரிவித்து பிரச்சனை செய்து வந்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி., இந்த செய்தியை தனது வீட்டார்கள் அறியும் பட்சத்தில் தனது படிப்பிற்கு தடைவரலாம் என்று நினைத்து., இது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில்., அந்த ஆசிரியர் மாணவியின் வீட்டிற்கு அருகிலேயே வாடகைக்கு புதிய வீட்டை ஏற்பாடு செய்து வந்துள்ளார். நேற்று மது போதையில் இருந்த ஆசிரியர் மனைவியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துகொண்டார்.
மது போதையிலேயே., மாணவியின் இல்லத்திற்குள் சென்று மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு தெரிவித்துள்ளார். அதற்கு அந்த மாணவி காதலிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார். கத்தியை பார்த்தவுடன் மாணவி கதறவே., அவரின் கழுத்தை அறுத்துவிட்டு அவரும் தற்கொலை முயற்சி செய்துகொண்டார்.
இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் அவரின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மாணவி உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுதாரித்த அவர்கள் உடனடியாக அவசர ஊர்திக்கு தொடர்பு கொண்டனர்.
அவசர ஊர்தியின் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மனைவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த ஆசிரியரை வீதிக்கு வந்து உயிருக்கு போராடிய அவரையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் வழங்கினர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சங்கருக்கு சிகிச்சை முடிந்தவுடன் அவனிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.






