ஷாருக்கான் பிறந்தநாள் விழாவில் ரசிகன் தற்கொலை முயற்சி!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு உலக அளவில் ராசிகள் உள்ளனர். தமிழ் சினிமாவிலும் நடத்த ஷாருக்கானுக்கு தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை காண ஏராளமான ரசிகர்கள் அவரின் வீட்டின் முன் திரண்டனர்.

இருதினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் தீவிர ரசிகரான சலீம் என்ற இளைஞர் ஷாருக்கானைப் பார்ப்பதற்காக கொல்கத்தாவில் இருந்து மும்பை சென்றுள்ளார்.

அங்கு ஏராளமான கூட்டம் என்பதால் சலீமுக்கு ஷாருக்கானைப் பார்க்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த சலீம் தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார்.

இதையடுத்து அங்கு குவிந்திருந்த போலீசார் சலீமை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர், இந்த நிலையில் மருத்துவமனையில் சலீம் சிகிச்சை பெற்று வருகிறார்.