பிணமாக தொங்கிய சுற்றுலாப்பயணி! அதிர்ச்சியில் காவல் துறை!

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி அருகில் உள்ள வெஸ்ட்மீட் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஹீத் அல்லென்(வயது 33). இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஹீத், சமீபத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், இங்குள்ள புத்த கயா பகுதியில் வெளிநாட்டவர் ஒருவர் மரத்தில் பிணமாக தொங்குவதாக காவல் துறைக்கு அப்பகுதி மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, விரைந்துவந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹீத் அல்லென் கைப்பட எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தில் தனது மரணம் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தனது சகோதரிக்கு தெரிவிக்குமாறு எழுதியுள்ளார். இந்த கடிதம் உண்மையா என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.