‘டி.டி.வி’ தினகரன் அணியை கலைக்க திடீர் வியூகம்!

தேவர் குருபூஜை கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை வரவேற்று பசும்பொன்னில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

இதனை அமமுக நிர்வாகிகள் கிழித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அமமுக நிர்வாகிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக பலரை இரவோடு இரவாக கைது செய்தும், இன்னும் சிலரை தேடியும் வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க தினகரன் தரப்பு, அதிமுகவின் பலத்தை குறைக்கும் நோக்கோடு அமைச்சர் ஜெயக்குமார் குறித்த சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இடைதேர்தல் வருவதற்குள் தினகரன் தரப்பின் பலத்தை பாதியாக குறைக்க அதிமுகவும் சில வியூகம் வகுத்து வருகிறது.

அதிமுகவின் பரம எதிரி திமுக தான் என்று மேடைக்கு மேடை ஜெயலலிதா அதிமுகவினருக்கு உணர்த்தியுள்ள நிலையில், தினகரன் – ஸ்டாலின் சந்திப்பு குறித்த தகவல்களை முன்னிலைப்படுத்தி காட்டினால் சிலர் தினகரன் மீது விரக்தியடைந்து தங்கள் பக்கம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறது முதல்வர் தரப்பு.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தவறை உணர்ந்து மீண்டும் கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று முதல்வரும், துணை முதல்வரும் கூட்டாக அறிக்கை விட்டது இதனை மனதில் வைத்து தான் என்று சொல்லப்படுகிறது.

தினகரன் தரப்பில் இருந்து கணிசமான நிர்வாகிகளை அதிமுகவிற்கு இழுக்கும் பொறுப்பு அமைச்சர் உதயகுமார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் நெருங்கும் வேளையில் சில அதிரடி நடவடிக்கைகள் மூலமாக தினகரன் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களை அதிமுக பக்கம் இழுக்க வியூகம் வகுக்கப்பட்டு