திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று ஏழுமலையானை வணங்குகின்றனர்.
ஒவ்வொரு நாளும் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் கடந்த மாதம் புராடசி என்பதால், திருப்பதியில் 20 மணி நேரத்திற்கும் மேலாகக் பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசிக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டது.
இந்நிலையில், திருப்பதியில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து, திருமலை தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாள் முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு திருப்பதியில் நகராட்சி தடை விதித்தது. இதனை தொடர்ந்து தற்போது திருப்பதி கோயிலிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், திருமலையில் உள்ள ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் தேநீர், காபி, பால் அருந்துவதற்கு பிளாஸ்டிக்கினால் ஆன கப்புகள், கவர்கள் போன்றவை இனி பயன்படுத்த கூடாது.
கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் கூட பிளாஸ்டிக் பொருட்களாக இருக்க கூடாது. இதை மீறினால் ரூ. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், லட்டு கவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை தற்போது கொடுக்கப்படும் லட்டு கவர்களை பயன்படுத்த தேவஸ்தானம், நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.