அரசு அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் டமால்.!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள இராணுவ உயரதிகாரிகள்., பரா மாகாணத்தில் இருந்து ஹேரட் மாகாணத்திற்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர். அதன் படி நேற்று காலையில் பரா மாகாணத்தின் கவுன்சில் தலைவர் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் 24 பேர் இராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.

இந்த இராணுவ ஹெலிகாப்டரானது அங்குள்ள அனார் டாரா மாவட்டத்திற்கு உட்பட்ட மலைப்பகுதி வழியாக செல்லும் போது எதிர்பாராத விதமாக வானிலை திடீரென மோசமடைந்தது.

இதன் காரணமாக விமானியால் விமானத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை., இதன் காரணமாக அந்த இராணுவ ஹெலிகாப்டரானது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த தகவலை அறிந்த கட்டுப்பாட்டு அதிகாரிகள் சம்பவம் குறித்து தனது உயர்அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததில்., விமானமானது முற்றிலும் சிதைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள்., எவரேனும் உயிருடன் உள்ளார்களா என்று சோதனை செய்தனர்.

அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.