கள்ளச்சாரயம் குடித்த இந்தியர்கள் மருத்துவமனையில்!

குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்து 40 இந்தியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குவைத்தில் மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதனால், அல் ஷுயூக் எனும் பகுதியில் விற்கப்பட்ட சட்டவிரோத மதுபானத்தை வாங்கி பலர் குடித்துள்ளனர்.

இதனால், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 40 பேர் இந்தியர்கள் எனவும், இதுவரையில் சிகிச்சை பலனின்றி இந்தியர்கள் உள்பட 10 வெளிநாட்டவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த இந்திய தூதரக அதிகாரிகள், மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

மேலும், குவைத் சுகாதார அமைச்சகத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.