அற்ப ஆசைக்காக இரு பெண்களால் சிறுவனுக்கு நேர்ந்த நிலை..? கேமராவில் சிக்கிய திடுக்கிடும் காட்சி.

சென்னை தண்டான்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகன் தினேஷ்கு நான்கு வயதாகிறது. அதே பகுதியில் உள்ள மாநகராட்சி உருது பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறான்.

மாலையில் வகுப்பு முடிந்ததும் தினேஷை அழைத்து செல்ல அவனது தந்தை பள்ளிக்கு வந்தார்.

அங்கு தினேஷ் காணாமல் போனதை அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஆசிரியரிடம் விசாரித்தார்.

அப்போது, தேவி என்பவர் தினேஷின் அத்தை எனக் கூறி அவனை அழைத்துச் சென்றதைக் கூறியுள்ளார்.

இதையடுத்து பிரகாஷ் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினார். ஆனால் எங்கும் இல்லாததால் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் புடவை அணிந்திருந்த ஒரு பெண்ணும், சுடிதார் அணிந்திருந்த ஒரு பெண்ணும், தினேஷை அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து 2 பெண் களின் புகைப்படத்துடன் அப்பகுதியில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், வியாசர்பாடி கணேசபுரம் கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த குட்டியம்மாள், அவரது மகள் ஐஸ்வர்யா என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களது வீட்டுக்குச் சென்ற காவல் துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து, தினேஷை மீட்டனர்.

இதுகுறித்து இருவரிடமும் நடத்திய விசாரணையில், பணத்துக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தி விற்க முடிவு செய்தோம்.

அதன்படி பள்ளிக்கு சென்று உறவினர் எனக் கூறி தினேஷை கடத்தி வந்தோம் என இருவரும் கூறியுள்ளனர். மீட்கப்பட்ட தினேஷ், அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டான்.