சூரிய ஒளிக்கதிரால் தங்க நிறமாக மாறும் அதிசய நந்தி!

பொதுவாக ஒவ்வொரு கோயில்களிலும் ஒரு அதிசயம் உள்ளது. ஆனால் அவை நமக்கு தெரியாமல் இருக்கும். அப்படி நமக்கு தெரியாத நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு கோயில் தான் அருள்மிகு ரிஷபேஸ்வரர் கோயில்.

இக்கோயில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் அமைந்துள்ளது.

ஸ்ரீ அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழைமை வாய்ந்த கோயிலாகும்.

இந்த கோயிலில் மூலவருடன், தட்சணாமூர்த்தி, பாலமுருகன், நவகிரகம் மற்றும் கோயில் வளாகத்தில் மிக பெரிய நந்தி இருக்கிறது.

கோயில் ராஜகோபுரத்தை கடந்து, நந்தீஸ்வரர் மீது, சூரிய ஒளிக்கதிர்கள் பட்ட, சிறிது நேரத்தில் தங்க நிறமாக மாறுகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாதம், மூன்றாம் தேதியன்று, சூரிய ஒளியானது, கோயிலின் ராஜகோபுரம் மீது பட்டு, பின், நந்தீஸ்வரர் மீது விழுகிறது. அந்த நேரம் நந்தி தங்க நிறமாக காட்சியளிப்பார்