ஆரவ் உடன் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் கனவு நாயகி!

நடிகர் ஆரவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடிகை ஓவியா பங்கேற்றுவலது தெரிவித்துள்ளார்.மேலும் அதற்கான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகம் பேசப்பட்டவர் ஓவியா. தனது வெளிப்படையான நடவடிக்கைகளால் ,குழந்தைத்தனமான பேச்சல் பாக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார் மேலும் புகழின் உச்சிக்கு சென்ற ஓவியாவுக்கென இளைஞர்கள் தனி ஆர்மியை உருவாக்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஓவியா மற்றொரு போட்டியாளரான ஆரவ்விடம் தனது காதலை தெரிவித்தார் . ஆனால் ஆரவ் அவரது காதலை மறுக்கவே தற்கொலை செய்து கொள்ள முயன்றார் ஓவியா. இதையடுத்து அவர் நிகழ்ச்சியிலிருந்து தானாக வெளியேற ஆரவ் இறுதிவரை சென்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆனார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த பின்னர் அவ்வப்போது ஓவியா மாற்று ஆரவ் சந்தித்துக்கொள்ளும் புகைப்படங்களும் ,ஒன்றாக வெளியே செல்லும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

இந்நிலையில் இன்று ஆரவ் தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அந்த கொண்டாட்டத்தில் நடிகை ஓவியாவும் பங்கேற்றிருக்கிறார். அதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.