சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம்: நீதிமன்றம் அதிரடி கருத்து!

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம்: பா.ஜ.க.வைச் சோ்ந்த பி.ஜி.மோகன் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அடுத்த மாதம் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கிவிடும். அப்போது பக்தர்களை தவிர வேறு யாரும் கோவிலுக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும். மேலும், உச்சநீதிமன்ற தீர்பபை தொடர்ந்து இந்துக்கள் அல்லாதவர்கள், வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலுக்குள் வருவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

மேலும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 4 பெண்கள் சென்று வழிபாடு நடத்த இருப்பதால் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யத்தான். இந்த மனுவும் கேரளா உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் கூறுகையில், சபரிமலை ஐயப்பன் கோவில் என்பது இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. கோவிலின் பாரம்பரியங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவருக்கும் சொந்தமானது. அதே போன்று, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் அனைவருமே இருமுடி அணிந்து செல்ல வேண்டுய அவசியம் இல்லை.

ஆனால், இருமுடி கட்டி செல்பவர்கள் மட்டுமே 18 படிகளை கடந்து செல்ல முடியும். இந்த விவகாரத்தில் கேரளா அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இரு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், 4 பெண்கள் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையில், யார் பக்தர்களாக இருந்தாலும், அவர்களுக்கு அனைத்து வகையான வசதிகளையும் வழங்க வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.