நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன், தனது மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சோனியா பேகம், 25 வயது நிறைந்த இவர் திருமண விழா போன்ற நிகழ்ச்சிகளில் பாடகியாக இருந்துள்ளார்.அதேபகுதியில் பார் ஒன்றில் வேலை பார்த்து வந்தவர் சல்மான். இவர்கள் இருவரும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
அதன்பின் இருவரும் ஹைதராபாத்தில் வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 வயது குழந்தை இருந்தது. இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன் சோனியாவிற்கு இளைஞர் ஒருவருடன் தகாத உறவு இருந்தது சல்மானிற்கு தெரியவந்தது. இதுகுறித்து இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் அவர்களது வீட்டிலிருந்து கருகிய வாசம் வருவதாக அக்கம்பக்கத்தினர் போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டை திறந்து பார்த்த போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சோனியா உடல் கருகி சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் மேற்கொண்ட விசாரணையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவியின் கை, கால்களை கட்டிப்போட்டு சல்மான் தீ வைத்து எரித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் சல்மான் தங்களுக்கு பிறந்த 2 வயது குழந்தையை தன்னுடைய பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு, நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






