சாலையில் தரையிறங்கியபோது வெடித்து சிதறிய விமானம்.!

அமெரிக்காவில் 2ம் உலகப்போர் நடைபெற்றபோது பயன்படுத்தப்பட்ட விமானம் சாலையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

2ம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட யுஎஸ் ஏடி 6 என்ற விமானத்தை அலாஸ்காவைச் சேர்ந்த ராப் பிலிஸ் என்பவர் ஏலத்தில் எடுத்து பயன்படுத்தி வந்தார். அவர் நேற்று கலிபோர்னியாவை சுற்றி வந்த போது, லாஸ் ஏஞ்சலிஸ் புறநகரில் விமானத்தில் திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக சாலையில் தரை இறங்க முடிவுசெய்யப்பட்டது. இதையடுத்து விமானம் சாலையில் தரையிறங்கியபோது ஏற்பட்ட உராய்வில் விமானம் தீப்பிடித்து இரண்டாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.