தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு ஊரைச் சார்ந்தவர் ராஜா. இவரின் மகளின் பெயர் தேவி. ராஜா மாட்டுவண்டியின் மணல் விற்பனை செய்யும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் மணல் அள்ளும் போதெல்லாம் தனது மகளை தன்னுடன் அழைத்து வரும் வழக்கத்தை வைத்துள்ளார்.
அவ்வாறு தனது மகளை அழைத்து வரும்போது., அங்குள்ள 16 வயதுடைய நபருக்கும் தேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது பின்னாளில் காதலாக மாறி., அதன் மூலமாக அந்த சிறுவன் தேவிக்கு அவ்வப்போது பாலியல் தொல்லை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில்., அந்த சிறுவன் தேவியின் வீட்டிற்கு வரும் வழக்கத்தை வைத்துள்ளார். அவ்வாறு அவன் வீட்டிற்கு வந்து செல்வதை., இவர்களின் பக்கத்துக்கு வீட்டில் உள்ள கண்ணன் என்பவர் பார்த்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தேவியிடம் அவர் கண்டித்துள்ளார்., இந்த கண்டிப்பு வாக்குவாதத்தில் முடியவே தேவியின் ஆடைகளை கிழித்து அவரை தாக்கியுள்ளார் கண்ணன். இந்த விசயம் குறித்து தனது பெற்றோர்களிடம் தேவி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை கேட்ட தேவியின் பெற்றோர்., இது குறித்து கண்ணனிடம் முறையிட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தால் மீண்டும் ஒரு பிரச்சனை தலைதூக்கவே., இந்த சம்பவத்தால் தேவியின் தாயார் கோபமடைந்து அவரின் தாயார் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
தனது தாயுடன் பேசுவதற்காக தேவி அங்குள்ள மகேந்திரன் என்பவரிடம்., தனது தாயுடன் அலைபேசியில் பேசிவிட்டு அலைபேசியை தந்துவிடுவதாக கூறியுள்ளார். ஆனால் இந்த விசயத்திற்கு அவர் மறுத்துள்ளார்.
இந்நிலையில்., திடீரென மகேந்திரன் அலைபேசி காணாமல் போனதால் சந்தேகமடைந்த மகேந்திரன்., தேவியை மரத்தில் கட்டி வைத்து அவரை அடித்து உதைத்ததுமில்லாமல்., அவரின் உடலில் சூடு வைத்துள்ளனர். இதனால் தேவி சம்பவ இடத்திலேயே மயங்கினார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பிவிடவே., மயக்கம் தெளிந்த தேவி கயிறை அவிழ்த்துக்கொண்டு., அங்கிருந்து திருவையாறு அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றார். மேலும் இந்த சம்பவம் குறித்து அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மகேந்திரன்., கண்ணன்., சிவகுமார்., வித்யா மற்றும் 15 வயதுடைய சிறுவனை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் இந்த பிரச்சனை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






