அர்ஜுனுக்கு எதிராக களமிறங்கியுள்ள பிரபல முன்னணி நடிகர்கள்!

அண்மைகாலமாக பாலியல் குற்றச்சாட்டுகளை அம்பலமாக்கும் Me Too விசயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் பல பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் பற்றி அதிரடியாக பதிவிட்டு வருகின்றனர்.

இதில் பதிவிடும் பலர் சினிமா துறையை சார்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள். அண்மையில் பாடகி சின்மயி, தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் லீனா என தமிழ் சினிமாவை சேர்ந்த பலர் இதில் புகார் கூறியுள்ளனர்.

வைரமுத்து, இயக்குனர் சுசி கணேஷன் ஜான் விஜய், சிம்பு என தற்போது சிக்கியுள்ளார்கள். இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்ருதிக்கு ஆதரவாக பிரபல நடிகர் சித்தார்த் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் களத்தில் இறங்கியுள்ளார்கள்.