அரசியல் தீர்வு என்பது ஒரு மாயை..?

சீ.வி. விக்னேஸ்வரனை வடமாகாண முதலமைச்சராகிய பாவத்தை 5 ஆண்டுகளாக அனுபவித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டபோதே இதனைத் தெரிவித்த மாவை சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விக்னேஸ்வரன் விமர்சிப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் காணிகளைப் பாதுகாக்காவிட்டால், அரசியல் தீர்வு என்பது ஒரு மாயை என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினர் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இதன்போது தெரிவித்துள்ளார்.