சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஜனாதிபதியின் கிரக நிலை எவ்வாறு ஆதிக்கம் செலுத்தும் என பிரபல ஜோதிடர் ஆரூடம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கிரக நிலை சிறப்பாக உள்ளதாக பிரபல ஜோதிடர் வியன்கஸ்வகுரே தேவானந்த தேரர் கணித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் சூழ்ச்சிக்காரர்களினால் ஜனாதிபதியின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்விலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நாட்களில் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது.
2006ஆம் ஆண்டும் அவருக்கு ஆரம்பித்த ராஜ யோகம் காரணமாக அவர் இந்த நாட்டின் அரச தலைவராக தெரிவானார்.
இந்த காலப்பகுதியில் அவரது கிரக நிலைமை மிகவும் பலமாக காணப்படுகின்றது. எந்தவொரு எதிரியாலும் அவருக்கு எதிராக செயற்பட முடியாது. தீய சக்திகளின் பாதிப்பு தொடர்பில் கண்டுக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
அரசாங்கத்தை நிர்வாகிக்கும் ஜனாதிபதி அனைத்து தினங்களிலும் தர்மத்துடன் வாழும் நபர் என பல காலமாக நான் அறிந்திருந்தேன். தர்மம் தலை காக்கும்.
ஜனாதிபதிக்கு பாதிப்பு ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்கள் இந்த காலப்பகுதியில் படுதோல்வியடையும் நிலை ஏற்படும். அதற்கான கிரக நிலை பலமாக உள்ளது.
ஜனாதிபதியின் ராஜ யோகம 2025 ஆம் பூர்த்தியாகும் வரை ஜனாதிபதியை நாட்டில் தலைவராக வைக்கும். அது மாத்திரமின்றி சர்வதேசம் அளவில் புகழ் பெறுவார் என்பது உறுதி ஜோதிடர் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சமகால அரசியல் மட்டத்தில் அதிகார ஆதிக்கம் தீவிரம் பெற்றுள்ளது. ஆட்சியை கைப்பற்ற பல தரப்பினராலும் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதி ராஜயோகம் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.