கள்ளக் காதலியின் மகளைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்….!

கள்ளக் காதலியின் மகளைக் காதலித்து, கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்….!

கன்யாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள கொல்லஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர், குமாரராஜா. இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் சுந்தரிராதா (வயது 39) இவர்களுக்கு, 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் முன்சிறை அருகில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.

சுந்தரி ராதாவிற்கும், கொடுங்குளம் பகுதியில் வசித்து வந்த ரசல்குமார் (வயது 25) என்பவருக்கும், பழக்கம் ஏற்பட்டு, பின் அது கள்ளக் காதலாக மாறியது. ரசல்குமார், ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், அடிக்கடி, சுந்தரிராதாவின் வீட்டிற்குச் செல்லும் சமயங்களில், ரசல்குமார், சுந்தரிராதாவின் மகளிடம் பேச்சு கொடுத்து பழகினார். பின், அந்தப் பெண்ணைக் காதலிப்பதாகக் கூறினார். அதற்கு, அந்தப் பெண்ணும் சம்மதித்தார்.

இந்த செய்தி அறிந்ததும், சுந்தரிராதா தனது மகளைக் கண்டித்தார். இருவருக்குள்ளும், இது தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்த நிலையில், இரவு துாங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைக் காணவில்லை. இதனால், அதிர்ந்த சுந்தரிராதா ரசல்குமாருடன் சேர்ந்து பெண்ணைத் தேடினார். பின், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அந்த மாணவியைக் காணவில்லை, என்று புகார் அளித்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்த போது, ரசல்குமார் தான், அந்தப் பெண்ணைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததும், பின், அந்தப் பெண்ணை, சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பிய விபரமும் தெரிய வந்தது.

இதனால், அந்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.