கணவனை அரிவாளால் வெட்டி, மனைவியின் தாலியைப் பறித்துச் சென்ற கும்பல்….!

கணவனை அரிவாளால் வெட்டி, மனைவியின் தாலியைப் பறித்துச் சென்ற கும்பல்….!

ராமநாதபுரம் அழகன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை (வயது 35). இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் தமிழரசி (வயது 31). கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, தன் சொந்த ஊருக்குத் திரும்பினார்.

தன் டூ வீலரில் மனைவியுடன், ராமநாதபுரம் சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அழகன்குளம் நதிப்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது, திடீரென்று 3 மர்ம நபர்கள், அவர்களை வழி மறித்தனர். திருமலையின் கழுத்தில் அரிவாளை வைத்து, தமிழரசியின் கழுத்தில் இருந்த 9 பவுன் தாலிச் செயினைக் கேட்டனர். தர மறுத்தால், திருமலையைக் கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

இதனால், தமிழரசி தன் கழுத்தில் இருந்த 9 பவுன் தாலிச் செயினைக் கழட்டித் தந்தார். பின், அந்தக் கும்பல், திருமலையை, முட்புதருக்குள் இழுத்துச் சென்று அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றது.

காயமடைந்த திருமலை, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இது குறித்து, தேவிபட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.