10 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை ஐஸ்வர்யா ராய் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டது குறித்து புகார் கூறியும் யாரும் அது குறித்து கேட்கவில்லை என சின்மயி கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல பாடகியாக இருக்கும் சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என கூறி அதிரவைத்தார்.
சமூகத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் சின்மயியிடம் அது குறித்து கூறிய பதிவை அவர் டுவிட்டரில் ஷேர் செய்து வருகிறார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட உடனேயே அதை வெளியில் சொல்லாமல் இப்போது ஏன் சொல்கிறீர்கள் என பலர் சின்மயியை கேள்வி எழுப்புகிறார்கள்.
இது குறித்து டுவீட் செய்த சின்மயி, நடிகை ஐஸ்வர்யா ராய் கூட கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் புகார் அளித்தார்.
ஆனால் அது குறித்து யாரும் கேட்கவில்லை.
இதன் காரணமாக அவர் தனது வேலையை எப்படி இழந்தார் என்ற தகவல்களும் வந்தன.
இப்படி இருக்கையில், சாதாரண பெண்கள் ஏன் இதுகுறித்து முன்பே பேசவில்லை என கேட்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்.






