1,668 உயரத்தில் தொங்கியபடி குடி உரிமை பெற்ற 6 பேர்.!

உயரமான கோபுரத்தில் இருந்து தொங்கியபடி, புதிதாகக் கனடாவின் குடியுரிமை பெற்ற 6 பேர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

குடியுரிமை வாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டொரன்டோவில் இருக்கும் சி.என். டவர் மீது ஏறிய குடியுரிமை அதிகாரிகள், அங்கு உயரத்தில் கயிற்றில் தொங்கியபடி இருந்த 6 பேருக்கு கனட நாட்டின் குடியுரிமையை அளித்தனர்.

அதில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும், ஆயிரத்து 668 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தாலும், தங்களது வலது கரங்களை உயர்த்தி உறுதி மொழி கூறியதோடு, ஒருமித்த குரலில் பாடினர்.