திமுகவின் கோட்டையை சரிக்க நடக்கும் சதி..? சூட்சமமாக மறைத்து வைக்கப்பட்டுள்ள இரகசியம்.!

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ள திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதியில் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை தற்போதிலிருந்தே தொடங்கி உள்ளன.

எல்லாரையும் விட தினகரன் முன்னதாகவே குக்கர் டோக்கன் போடப்பட்டு விட்டது என்று கூறி அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய தலைமை தேர்தல் அதிகாரி, 5 மாநில மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்து இருந்தார்.

அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேதி அறிவிக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ள காரணத்தினால், தற்போது தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த இயலாது என்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரி கைவிரித்தார்.

இதற்கு முன்னர் பருவமழை தொடங்கிய சமயத்தில் கூட தேர்தல் நடைபெற்றுள்ளது. தற்போது மழையை காரணம் காட்டி இடைதேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதைய சூழ்நிலையில் அழகிரி பிரச்சனையை வைத்து திமுக ஓட்டுகளை பிரித்தால் மட்டுமே அதிமுகவின் வெற்றி சாத்தியமாகும்.

இந்த நேரத்தில் இடைதேர்தல் நடந்தால் எந்த கட்சியும் கூட்டணி இணக்கப்பாடு எட்டாமல் இருப்பதால் வாக்குகள் பிரியுமே தவிர ஓரிடத்தில் குவிக்கப்படாது.

நாடாளுமன்றத் தேர்தல் வரையில் ஸ்டாலின் – அழகிரி மோதல் நீடிக்க வேண்டும் என அதிமுக தரப்பு எதிர்பார்க்கிறது.

இடைத்தேர்தலோடு மோதல் முடிவுக்கு வந்தால் இரு தரப்பும் இணைந்து தி.மு.க பலம்பெற்றுவிடும்.

அப்போது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கேள்விக்குறியாகி விடும். இதனை தவிர்க்கவே தேர்தல் ஒத்திவைப்பு நடந்துள்ளது.