போக்குவரத்து அமைச்சர் வீட்டில், ஐடி துறை திடீர் ரெய்டு!!

போக்குவரத்து அமைச்சர் வீட்டில், ஐடி துறை திடீர் ரெய்டு!! ஒரே நேரத்தில் 16 இடத்தில் ரெய்டு..!!

டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கலோட் அவர்களின் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து துறை, வருவாய் துறை, தொழில்நுட்ப துறை, நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சராக இருப்பவர் கைலாஷ் கலோட்.

இந்நிலையில், இன்று காலை அமைச்சர் கைலாஷ் கலோடுக்கு சொந்தமான இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில், அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.