தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்த வழக்கில், அக்டோபர் 22க்கு பிறகே தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இருவேறு தீர்ப்புகளை கூறியது.
இதனை தொடர்ந்து மூன்றாவது நீதிபதியாக நீதிபதி எம்.சத்தியநாராயணனை நியமித்து விசாரணை நடந்துவந்தது. இந்த வழக்கில் வழக்கறிஞர்களின் வாதம் நிறைவு பெற்றதை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிபதி விடுமுறையில் செல்வதாலும், உயர்நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை என்பதாலும் 22ஆம் தேதிக்கு பிறகே தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தீர்ப்பிற்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.