பிரித்தானிய மகாராணியின் பக்கிங்ஹாம் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற நாய்கள்…..!!

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் நடத்தப்பட்ட நாய்கள் பேரணி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்து செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி இந்த வினோத போராட்டம் நடத்தப்பட்டது.பலவகையான நாய்களுடன் அவற்றின் உரிமையாளர்கள் நாடாளுமன்றம் நோக்கி பயணம் மேற்கொண்டனர்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதால் தங்களுக்கு மட்டுமல்லாது செல்ல பிராணிகளுக்கும் இழப்பு ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.புதிய கொள்கையின் படி ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் செல்லப்பிராணிகளுக்கு பாஸ்போர்ட் வழங்காது. இதனால் செல்லப்பிராணிகளுக்கான உணவு உள்ளிட்ட அனைத்தின் விலையும் உயர்ந்துவிட்டதாக அவற்றின் உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

எனவே இந்த நூதன போராட்டம் நடத்தப்பட்டது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகி செல்வதற்கான பிரெக்ஸிட் என்று அழைக்கப்படும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஒரேநேரத்தில் பலவகையை சேர்ந்த ஆயிரக்கணக்கான நாய்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

செல்லப்பிராணிகளுக்காக இங்கிலாந்து மக்கள் நடத்திய இந்த வினோதமான நாய்களின் போராட்டத்துக்கு ஆதரவு பெருகிய வண்ணமிருப்பதாக தெரிவிக்கபடுகின்றது.