பிறந்தநாள் வாழ்த்து கூற சென்ற இடத்தில் காதலன் காதலிக்கு செய்த செயல்!

பிறந்தநாள் வாழ்த்துகூற வந்த போது காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு போலீசார் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள அன்னியூர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் எம்.பி.பி.எஸ் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.இவரது காதலர் கார்த்திவேல்.சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த இவர் சென்னையில் காவலராக பணி புரிந்து வருகிறார்.

சரஸ்வதியும்,கார்த்திவேலும் பேஸ்புக் மூலம் நண்பர்களாகி பின் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சரஸ்வதி இன்று தனது பிறந்தநாள் விழாவை கொண்டவிருந்தார்.

அதனால் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க கார்த்திவேல் அன்னியூர் சென்றுள்ளார். அப்பொழுது சந்தித்துக்கொண்ட இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதனால் கோபமடைந்த கார்த்திவேல் தனது காதலி சரஸ்வதியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார். பின் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் இச்சம்பவத்தால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.