பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் நடக்கும் சதி..? உண்மையை உடைத்த வியாபாரிகள்.!

சிறு, குறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடையை நீக்க வேண்டும் என பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 1.1.2019 முதல் ஒருமுறை பயன்படுத்தும் ஒரு சிலபிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி,சேமிப்பு, விற்பனை, உபயோகம்முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது.

அதாவது, எந்த ஒரு பொருளையாவது வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப எடை போட்டு பேக்கிங் செய்து கடைகளில் வழங்கப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்கெனவே கடைகளில் பொருள்களை பேக்கிங் செய்து பாக்கெட்டுகளில் வழங்கும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மக்கள் அன்றாடம் கடைகளுக்கு சென்று சிறிய அளவுகளில் வாங்கும் பொருள்களை பேக்கிங் செய்து கொடுக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் மறுசுழற்சி செய்யக் கூடியவை.

ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் பேக்கிங் செய்து வழங்கும் பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்யமுடியாது

இப்போது சேகரிக்கப்படும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகளில் 80சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. எனினும், தமிழக அரசுதற்போது மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்ய சட்டம் கொண்டு வந்துள்ளது.

இதன்மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துணை போகின்றன.

ஏற்கெனவே, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழில் செய்து வரும் வணிகர்கள், உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிப்பதன் மூலம் சிறு,குறு தொழில்கள் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது.

எனவே, சிறு,குறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடையை நீக்க வேண்டும்.

மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்பொருள்களுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.