உருவான “லூபன்” புயல்..! வானிலை மையம் எச்சரிக்கை.!!

உருவானது “லூபன்” புயல்..! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.!!

அரபிக் கடலில் லூபன் என்ற புயல் உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,

அரபிக் கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு லூபன் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயலானது ஓமன் கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் மண்டலமாக மாறியுள்ளது. இதுவும் புயலாக உருவாக உள்ளது.

அடுத்து வரும் 24மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு. வட தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யலாம். எனவே, மீனவர்கள் வரும் 10-ம் தேதி வரை அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.