இரட்டை குழந்தைகளை கொடூரமாக தாக்கி கொன்ற தாய்! அதிர்ச்சியில் கணவன் விபரீத முடிவு!

அமெரிக்காவில் இரட்டை குழந்தைகளை தாய் ஒருவர் கொடூரமாக தாக்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை சேர்ந்த Mohammad Torabi (31) – Tina Torabi (30) தம்பதியினருக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

இவர்களுக்கு கடந்த 13 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். ஆனால் Tina-வின் போதை பழக்கத்தால் அவரிடம் இருந்து பிரிந்த Mohammad, இரட்டை குழந்தைகளுடன் தனியாக இருந்து வந்துள்ளார்.

மேலும் தன்னுடைய குழந்தைகளை Tina நெருங்கக்கூடாது எனவும் கட்டளையிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமையன்று Mohammad வீட்டிற்கு சென்ற Tina இரட்டை குழந்தைகளை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த Mohammad வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். ஆனால் அவருடைய உடல் இரண்டு நாட்களுக்கு பின்னர் ஏசி மாட்டப்பட்டிருந்த ஒரு பெட்டியின் மேல் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இதற்கிடையில் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளையும் மீட்ட பொலிஸார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தைக்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக Tina-வை கைது செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.