பாடசாலை மாணவி மாயம்!

எம்பிலிப்பிட்டி – பதலங்கல – தோரகல பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் 10 நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவித்து அவரது உறவினர்கள் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த பாடசாலை மாணவியொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் கடந்த 25ம் திகதி தனியார் வகுப்பிற்கு செல்வதாக தெரிவித்து வீட்டில் இருந்து வௌியேறியுள்ள நிலையில் , அன்றைய நாள் முதல் அவர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என அவரது தாய் குறிப்பிட்டுள்ளார்.