உடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் கோரிக்கை!

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பேஸ்புக் பேஸ்புக் நிறுவனம் ஒரே நேரத்தில் 220 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கை லாக் அவுட் செய்து மீண்டும் லாக் இன் செய்ய சொல்லி கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரம் இறுதியில் பேஸ்புக்கில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 9 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கு விவரம் ஹேக் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பேஸ்புக்கில் பெரிய ஹேக்கிங் செய்யப்பட்டு இருக்கிறது.

பேஸ்புக்கில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ”வியூ அஸ்” என்ற வசதியுடாக நம்முடைய பேஸ்புக் கணக்கை, வேறு ஒருவர் எப்படி பார்க்கிறார் என்று பார்க்கும் வசதியை கொண்டு வந்தது. அதில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக இந்த ஹேக்கிங் பிரச்சனை எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வியூ அஸ் வசதியை வைத்துக் கொண்டு 9 கோடி பேரின் பேஸ்புக் கணக்குகளை ஹேக்கர் திருடி இருக்கிறார்கள்.

தற்போது இதுபோன்ற பிரச்சினைய பேஸ்புக் சரி செய்துள்ளது.

இருப்பினும் பாஸ்வேர்டை இதனால் மாற்ற வேண்டும். இதற்காக 220 கோடி பேரிடம் பேஸ்புக்கை ஒருமுறை லாக் அவுட் செய்துவிட்டு லாக் இன் செய்ய வேண்டும் என்று பேஸ்புக் கோரிக்கையை விடுத்துள்ளது.