சென்னை குன்றத்தூர் அருகே உள்ள சிறுகுளத்தூர் பகுதியில் வசித்து வருபவர் திமுக பிரமுகர் கிரிராஜன்.
கிரிராஜனின் மனைவியின் தம்பி ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதற்கு அந்தப் பெண்ணின் அப்பா பாபு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆனால் கிரிராஜன் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி அவரிடம் அடைக்கலம் புகுந்தனர்.
அதோடு பாபுவிடம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிடுவோம் என்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அதற்கு பாபுவும் சம்மதம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். அதனை நம்பி சென்ற கிரிராஜனை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது.
அவர்களிடமிருந்து கிரிராஜன் தப்பி ஓட முயன்றும் காலில் வெட்டு விழுந்ததால் ஓடமுடியாமல் கீழே விழுந்தார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கிரிராஜனை சம்பவ இடத்திலேயே வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தும் கிரிராஜனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கிரிராஜன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணின் அப்பா பாபு மற்றும் அவரின் நண்பர்கள் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
இந்த கொலையை தொடர்ந்து பாபுவின் வீடு திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும் கிரிராஜனின் ஆதரவாளர்கள் ஆத்திரத்தில் சுற்றி வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.






