போதையில் போட்ட ஆட்டம்!. பரிதாபமாக உயிரைவிட்ட நண்பன்! வீடியோ ஆதாரம்!

வேலூர் மாவட்டம் சம்மந்திகுப்பத்தைச் சேர்ந்த மவீன் என்ற இளைஞன் பெங்களூரில் வேலைபார்த்து வந்துள்ளார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை மவீன் மற்றும் அவரது நண்பர்கள், 6 பேருடன் சேர்ந்து அங்கு உள்ள ஒரு தோப்பில் மது அருந்தியுள்ளார். பின்னர் போதையில் எல்லோரும் வீட்டிற்கு சென்றனர். மவீன் மட்டும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து இன்று காலை அவர்கள் மது அருந்திய தோப்பில் உள்ள கிணற்றில் மவீன் இறந்த நிலையில் மிதந்துள்ளார். மவீனின் உறவினர்கள் அங்கு வந்து பார்க்கையில், மவீனின் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த செல்போனில் மவீன் எவ்வாறு இறந்தார் காட்சிகள் பதிவாகியிருந்தது. போதையில் நண்பர்களுடன் மவீன் சண்டை போட்டு வாகவாதம், செய்வதும். நண்பன் ஒருவர் மவீனை கிணற்றுக்குள் தள்ளி விடுவதும், பின்னர் அனைவரும் கிணற்றில் குதித்து குளிக்கும் காட்சிகளும் செல்போனில் பதிவாகி இருந்தது.

இந்த சம்பவம் வெளியில் தெரிந்தவுடன் நண்பர்கள் 5 பேர் தலைமறைவாகியுள்ளனர். ஒருவர் மட்டும் போலீசில் சிக்கியுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், நாங்கள் விளையாட்டிற்காக செய்தோம் நண்பன் இறந்துவிட்டான் என்பது எங்களுக்கு தெரியாது என வாக்குமூலம் அளித்துள்ளார்.