ஸ்டாலின் வெற்றியை பறிக்க புதிய சூத்திரம்.!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி குழுக்கள் அமைக்கும் பணியை 80 சதவீதம் நிறைவு செய்திருக்கும் திமுக, கிராமங்கள், நகரங்களில் மக்களை சந்தித்து குறைகளை கேட்கும் பணியையும் துவங்கியிருக்கிறது.

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை எதிர் கொள்ள தேசிய, மாநில கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளும் மறைமுகமாக ஆரம்பித்துவிட்டன. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக, தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்த லுக்கு தயாராகும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 20 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார். அதன்படி, வாக்குசாவடிகளில் குழு அமைக் கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதேபோல் திமுக கிராமங்கள், நகரங்களில் மக்களை சந்தித்து குறைகளை கேட்கும் பணியை துவங்கியிருக்கிறது.

இது சம்மந்தமாக முன்னாள் மேயரும், தென்சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மா.சுப்பிரமணியன் கூறும்போது நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 7 மாதங்களில் நடைபெற இருக்கிறது. எனவே, வாரந் தோறும் கட்சி நிர்வாகிளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்த்தல், விடுபட்ட பெயர்களை சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை கவனித்து வருகிறோம். மக்களின் உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களையும் செய்து வருகிறோம்.

தேர்த லுக்கு தயாராகும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 20 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆணையிட்டிருந்தார். அதன்படி, தமிழகம் முழு வதும் இருக்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் குழுக்கள் அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்திருக்கிறது. ஒவ்வொரு வாக்குசாவடியிலும் 15 முதல் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இதில் பெண் கள் 5 பேர், இளைஞர்கள் 5 பேர் இருக்கின்றனர். இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 பொதுக்கூட் டங்கள் நடத்தப்பட்டு மத்திய, மாநில அரசுகளின் குறைகளை சுட்டிக்காட்டி தலைமை நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.