எம்எஸ் தோனி உலக சாதனை..!

கிரிக்கெட்டில் முன்னணி விக்கெட் கீப்பர்களான மார்க் பௌச்சர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது தோனி 3-ஆவது இடத்தைப் பிடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார்.

வங்கதேசத்துடனான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தவர்கள் பௌச்சர் மற்றும் கில்கிறிஸ்ட். இந்த பட்டியலில் இந்திய முன்னணி கிரிக்கெட் வீரர் தோணி 3-ஆவது இடத்தைப் பிடித்தார். இந்த போட்டியில் 2 ஸ்டம்பிங்குகள் செய்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 800 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தவர் என்ற புதிய சாதனையைப் தோணி படைத்துள்ளார்.

இதன்மூலம் 800 பேரை ஆட்டமிழக்கச் செய்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்தார்.

இதுவரை தென் ஆப்பிரிக்காவில் மார்க் பௌச்சர் 998 பேரையும், ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் 905 பேரையும் ஆட்டமிழக்கச் செய்துள்ளனர். இந்நிலையில் 800 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து தோனி 3 இடத்தில் உள்ளார்.

மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங்குகள் (184) செய்த விக்கெட் கீப்பர்களில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் தோனி. தோனியை அடுத்து இலங்கையின் குமார் சங்ககாரா 139 மற்றும் ரோமேஷ் கலுவிதரனா 101 ஸ்டம்பிங்குகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதுவரை மொத்தமாக தோனி பங்கேற்ற 90 டெஸ்ட் போட்டிகளில் 256 கேட்சுகள், 38 ஸ்டம்பிங்குகளுடன் 294 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அதேபோல் 327 ஒருநாள் போட்டிகளில் 306 கேட்சுகள், 113 ஸ்டம்பிங்குகளுடன் 419 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். மேலும், 93 டி20 போட்டிகளில் 54 கேட்சுகள் 33 ஸ்டம்பிங்குகளுடன் 87 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.