செக்க சிவந்த வானம் படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது. ஒருநாள் வசூல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் திரைக்கு வந்த, செக்க சிவந்த வானம் படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா, அதிதி ராவ் ஹைதேரி, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குனர் மணிரத்தினத்தின் இந்தபடத்திற்கும் எப்போதும் போல இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே தயாரித்து உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியது. ‘செக்க சிவந்த வானம்’ சென்னையில் மட்டும் ரூ.89 லட்சம் வசூலாகியுள்ளது. தமிழ்நாடு மொத்தமும் ரூ.6.82 கோடி வசூலித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.