தனது காதல் மனைவி திருமணமான மூன்று நாட்களிலேயே தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த செல்லத்துரை மற்றும் தீபா ஆகியோர் நெடுநாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் திருமணம் முடிந்தநிலையில் தனது கணவரின் வீட்டுக்கு வந்த தீபா அங்கு கழிவறை இல்லை என்பதை தெரிந்து கொண்டதும் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் 3 நாட்களுக்கு பிறகு கழிவறை இல்லாத ஒரு வீட்டில் என்னால் வாழ முடியாது எனவே நான் எனது அம்மா வீட்டிற்கு செல்கிறேன் என கோபமாக கூறிவிட்டு தனது கணவரை விட்டு பிரிந்து சென்று உள்ளார்.
மேலும் தன்னை விட்டு பிரிந்து செல்லும் தீபாவை செல்லத்துரை சமாதனம் செய்ய எவ்வளவு முயன்று கெஞ்சியும் தீபா கேட்கவில்லை, செல்லதுரைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டு அவரது வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த செல்லத்துரை தனது வீட்டின் அருகே உள்ள பெரிய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் செல்லதுரையின் குடும்பத்தார் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தைஏற்படுத்தியுள்ளது.






